பதிவு:2023-07-05 23:43:21
கருவூலத்தின் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் இணையதள மூலமாக மின்னனு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
திருவள்ளூர் ஜூலை 05 : ஓய்வூதியர்கள், ஜீலை, ஆகஸ்ட்,செப்டம்பர் ஆகிய குறிப்பிட்ட மூன்று மாதங்களில் நேர்காணல் செய்யப்படுவதால் அதிகளவிலான ஓய்வூதியர்கள் கருவூலத்தில் காத்திருந்து நேர்காணல் செய்வதை எளிமையாக்கும் நோக்கத்தில் சிவில் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருப்பின் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்திலும் குடும்ப ஓய்வூதியம் மற்றும் சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர் தங்களுக்கு ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதத்திலும் பணிக்கால ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் தாங்கள் ஓய்வு பெற்ற மாதத்திலும் இணையதள மூலமாக மின்னனு வாழ்நாள் சான்று பதிவு செய்து 2023–2024ம் ஆண்டிற்கான நேர்காணல் 01.07.2023 முதல் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு ஓய்வூதியர்கள் தங்களுக்குரிய மாதங்களில் நேர்காணல் செய்ய இயலாதநிலையில் நேர்காணல் மாதத்திற்கு அடுத்தமாதம் கூடுதலாக காலஅவகாசமாக வழங்கப்பட்டு நேர்காணல் செய்து கொள்ளவழிவகை செய்யப்பட்டுள்ளது.மேலும்,ஏப்ரல்,மே - மற்றும் ஜீன் மாதத்தில் நேர்காணல் செய்யப்பட வேண்டிய ஓய்வூதியதாரர்கள் 2023-2024ம் ஆண்டிற்குரிய சிறப்பு நேர்வாக ஜீலை 2023 மாதத்தில் நேர்காணல் செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளளது. ஜனவரி,பிப்ரவரிமற்றும் மார்ச்மாதங்களில் ஓய்வு பெற்ற,குடும்ப ஓய்வூதியம் துவங்கப்பட்டஓய்வூதியர்கள் ஜனவரி,பிப்ரவரி,மார்ச் 2024 ம் மாதத்தில் நேர்காணல் செய்துகொள்ளலாம்.
இருப்பினும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு தாங்கள் ஓய்வுபெற்ற மாதம், தங்களுக்கு குடும்பஓய்வூதியம் துவங்கப்பட்ட மாதம் தெரியாத நிலையில் அத்தகைய ஓய்வூதியர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் 2023ம் ஆண்டிற்கான நேர்காணல் செய்துகொள்ளலாம்.மேற்கண்ட நடைமுறையின்படி ஒவ்வொரு ஒய்வூதியர்களுக்கு தாங்கள் எந்தமாதம் நேர்காணல் செய்து கொள்ளவேண்டும் என்பது குறித்து ஒய்வூதியர்களின் கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் ஓய்வூதியர்கள் தங்களது நேர்காணல் மாதம் குறித்து தெரிந்து கொள்ள www.Karuvoolam.tn.gov.in என்ற இணையதளத்தின் முகப்பு திரையில் ஓய்வூதியர் நேர்காணல் என்கின்ற இணைப்பினை கிளிக் செய்துதங்களது ஓய்வூதிய கொடுப்பாணை எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து தங்களது பெயர் ,ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் தங்களது ஓய்வூதிய நேர்காணல் மாதம் தொடர்பானவிபரங்கள் அறிந்து கொள்ளவழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பின்வரும் ஏதேனும் ஒருமுறையை பின்பற்றி இணையதளம் மூலமாக மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து நடப்பாண்டிற்கான( 2023 -2024) நேர்காணல் செய்து கொள்ளலாம்.
ஜீவன் பிரமான் இணையதளமின்னனுவாழ்நாள் சான்றிதழ்,இந்தியதபால் துறைவங்கிசேவையினைபயன்படுத்தி ( அல்லது ) இ - சேவா,பொது சேவை நிறுவனத்தின் மூலமாக ( அல்லது ) ஓய்வூதியர் சங்கங்களின் சேவையைபயன்படுத்தி ( அல்லது ) ஆண்ட்ராய்டு கைபேசியில் ஜீவன் பிரமான் முகம் பதிவுசெயலியைபயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றுபெற ஓய்வூதியர்கள் அளிக்க வேண்டிய முக்கிய விவரங்கள் : ஆதார் அடையாள அட்டை,ஓய்வூதிய கொடுப்பாணை எண்,வங்கி கணக்கு எண், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தின் பெயர்,வாழ்நாள் சான்றிதழ் படிவத்தினை உரிய அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று தபால் மூலம் கருவூலத்திற்கு அனுப்பி ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம்.
வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் : மேற்கண்ட இணையதளமுகவரியிலிருந்து வாழ்வு சான்றிதழை பதிவிறக்கம் செய்து இந்திய தூதரக அலுவலர்,மாஜிஸ்ட்ரேட்,நோட்டரிபப்ளிக் அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்குதபால் மூலம் அனுப்பலாம். நேரிடையாக கருவூலத்திற்கு வருகை,மேலும் ஓய்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின் படிநேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகம்,ஆதார் அடையாள அட்டை மற்றும் வங்கிகணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் உரியமாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை தொடர்புடைய ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்குசென்று ஆண்டு நேர்காணல் செய்யலாம்.
ஓய்வூதியர்கள் தங்களது நேர்காணலில் ஏதும் குறைபாடுகள் இருப்பின் கருவூலகணக்குத்துறை ஆணையரகத்திற்கு தொலைபேசி,மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம்.கருவூலக் கணக்குத்துறை ஆணையரகம்,பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை,3 வது தளம்,நந்தனம்,சென்னை- 600 035. மின்னஞ்சல் dta.tn@nic.in,கட்டணமில்லா தொலைபேசி எண்கள் :18005995100, 9444674662, 9444316043,9444574706 ஆகும்.
கருவூலத்தின் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களுக்கு மட்டுமே மேற்கண்ட நடைமுறை பின்பற்றப்படுகிறது. எனவே, தமிழ்நாடு மின்வாரியம், உள்ளாட்சி,நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் மற்றும் இதர நிறுவனத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இது பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.