திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்ட என்.ஓ.சுகபுத்ரா பொறுப்பேற்பு

பதிவு:2023-07-13 21:01:19

திருவள்ளூர் ஜூலை 13 : திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநராக நியமனம் செய்யப்பட்ட என்.ஓ.சுகபுத்ரா அந்த துறை அலுவலர்கள் முன்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

இதற்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநராக பணியாற்றி வந்த செ.ஆ.ரிஷப், திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த என்.ஓ.சுகபுத்ரா திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதையடுத்து நேர்முக உதவியாளர் பாலாஜி, அந்த துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.