பதிவு:2023-07-13 21:02:42
திருவள்ளூர் அடுத்த வீரராகவபுரம் கிராமத்தில் மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி : நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
திருவள்ளூர் ஜூலை 13 : திருவள்ளூர் அடுத்த 48, வீரராகவபுரம் கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் மின் இணைப்பு உடனடியாக வழங்க கோரி மனு ஒன்றை அளித்தனர்.அதில், திருவள்ளூர் மாவட்டம் வீரராகவபுரம் கிராமத்தில் மூன்று நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் ஐந்து வயது குழந்தையை பூச்சி கடித்ததால் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.
மேலும் குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமமாக உள்ளது. இதை சரி செய்வதற்காக மின்சார துறை அதிகாரிகள், வருவாய்த்துறை, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆதிதிராவிடர் பகுதிக்கு மின்சாரம் வழங்கக் கூடாது என்று மாற்று சமூகத்தினர் மறுக்கிறார்கள். எனவே இந்த மின் இணைப்பு பாதிப்பை சரி செய்து தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.