பதிவு:2023-07-13 21:04:14
பள்ளிப்பட்டு அருகே திருமணமான 10 நாட்களில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை : குடித்துவிட்டு நாள்தோறும் சண்டையிடுவதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் : வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவு
திருவள்ளூர் ஜூலை 13 : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வி.ஜி.ஆர்.கண்டிகை காலனியைச் சேர்ந்த ஜே.சி.பி ஓட்டுநர் முத்து (25) அதே கிராமத்தைச் சேர்ந்த பி.எஸ்.சி படித்து முடித்த அனு (22) என்பவருடன் கடந்த 29-ம் தேதி கிராமத்தில் உள்ள மணமகன் வீட்டில் திருமணம் நடைபெற்றது. இந் நிலையில், நேற்று இரவு கணவன் தூங்கிக் கொண்டிருந்த அறையில் அனு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
திருமணமான 10 நாட்களில் இளம் பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதட்டூர்பேட்டை போலீசார் இறந்தவர் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
குடித்துவிட்டு தினந்தோறும் வீட்டுக்கு வந்து சண்டையிடுவதால் மனமடைந்து இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து புதுமணப் பெண் தற்கொலை சம்பவம் தொடர்பாக திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் விசாரனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.