கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலம் கிராமத்தில் கலப்புத் திருமணம் செய்ததால் தற்கொலை செய்து கொண்ட தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விடாமல் அடித்து விரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட எஸ்பியிடம் புகார்

பதிவு:2023-07-15 14:49:01



கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலம் கிராமத்தில் கலப்புத் திருமணம் செய்ததால் தற்கொலை செய்து கொண்ட தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விடாமல் அடித்து விரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட எஸ்பியிடம் புகார்

கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலம் கிராமத்தில் கலப்புத் திருமணம் செய்ததால் தற்கொலை செய்து கொண்ட தாயின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விடாமல் அடித்து விரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட எஸ்பியிடம் புகார்

திருவள்ளூர் ஜூலை 15 : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தண்டலம் கிராமத்தில் வசித்து வருபவர்கள் பானுப்ரியா மற்றும் அவரது கணவர் அமல்ராஜ்.கடந்த 2014 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் கலப்புத் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் ஆரம்பாக்கம் பகுதியில் வசிக்கும் பானுப்ரியாவின் தந்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கோரோனாவால் இறந்து விட்டார். அப்போது தந்தையின் உடலை காண வந்த பானுப்பிரியா மற்றும் அவரது கணவரை கிராம மக்களில் ஒரு சிலர் இவர்களை அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந் நிலையில் லட்சுமியின் இளைய மகள் திருமணம் ஆகி காரனோடை பகுதியில் வசித்து வருகிறார். வாரத்திற்கு இருமுறை தாயை வந்து பார்த்து செல்வதாகவும் அதேபோல் அடிக்கடி பானுப்பிரியா தனது தாயை ஊருக்கு வெளியே வந்து பார்த்துவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் பானுப்பிரியாவின் தாய் தன்னை பார்த்துக்கொள்ள யாரும் அருகில் இல்லை என மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்..

இதுகுறித்து தகவல் அறிந்த பானுப்ரியா தனது தாயை காண சென்ற நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கலப்புத் திருமணம் செய்த உனக்கு இந்த ஊரில் இடம் இல்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டு பானுப்பிரியாவை அடித்து துரத்தியதாக கூறப்படுகிறது . இதையடுத்து பானுப்ரியா ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் மீது விசாரணை செய்து தனது தாயின் உடலை காண்பிப்பதாக காவல்துறையினர் தெரிவித்து இரண்டு நாட்களாக காவல் நிலையத்திலேயே காக்க வைத்து தனது தாயின் உடலை எரித்த பின்பு சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று காண்பித்துள்ளனர்.

இதனால் விரக்தி அடைந்த பானுப்ரியா சென்னை தலைமை செயலகத்திற்கு நேரில் சென்று இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலக அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் நேற்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரில் வந்து புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட எஸ்பி பா.சிபாஸ் கல்யாண் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுத்தி அளித்ததாக கூறப்படுகிறது. கலப்பு திருமணம் செய்ததால் தனது தாயின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளாமல் விரட்டி அடித்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் அரசு, தீண்டாமையை எதற்கும் அரசு எங்களைப் போன்ற கலப்புத் திருமணம் செய்தவர்களை தனிமைப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார்.