பதிவு:2022-05-05 16:18:26
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளிக் குழுமம் சார்பில் தெய்வத் திருமதி. சகுந்தலாம்மாள் நினைவு 11 ம் ஆண்டு தமிழ் வளர்ச்சிப் போட்டிகள் :
திருவள்ளூர் மே 05 : திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளிக் குழுமம் சார்பில் தெய்வத் திருமதி. சகுந்தலாம்மாள் நினைவு 11 ம் ஆண்டு தமிழ் வளர்ச்சிப் போட்டிகள் நடைபெற்றது. பள்ளி தாளாளர் விஷ்ணு சரண் தலைமை தாங்கினார்.பள்ளி இயக்குனர் பரணிதரன் முன்னிலை வகித்தார்.பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப் அனைவரையும் வரவேற்றார்.அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் மாவட்டத்தின் முதுபெரும் புலவர். சம்பந்தம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாகவும், தமிழன்னைக்கு அணிகலன் சேர்க்கும் விதமாகவும் திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளிக் குழுமம் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சிப் போட்டிகளை சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறது.இப்பள்ளியில் தமிழ் அன்னை அனைவரின் மனதிலும் குடி கொண்டுள்ளார் என்பது தெள்ளத் தெளிவாக விளக்குகிறது என்கிறார்.பின்னர் அவர் போட்டிகளை துவக்கி வைத்தார்.
இதில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி,பேச்சுப் போட்டி,கவிதை போட்டி,ஓவியப்போட்டி என முத்தமிழ் போட்டிகளாக 12 விதமான போட்டிகள் 50 பிரிவுகளில் நடுநிலையுடன் சிறந்த நடுவர்களால் நடத்தப்பட்டது.போட்டிகளில் திருவள்ளூர்,பொன்னேரி, காஞ்சிபுரம், சென்னை மற்றும் வேலூர் கல்வி மாவட்டங்களை சேர்ந்த 106 பள்ளிகளில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அப்பொழுது போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறுகையில், தொடர்ந்து 11 ஆண்டுகளாக நடத்தப்படும் இப்போட்டிகள் எங்களுக்கு ஊக்கத்தையும், ஆக்கத்தையும், தமிழ் உணர்வையும் வளர்க்கும் விதமாக அமைந்துள்ளது என பெருமிதம் கொண்டனர்.இறுதியில் துணை முதல்வர் கவிதா கந்தசாமி நன்றி கூறினார்.