பதிவு:2023-07-15 14:58:32
பொதட்டூர்பேட்டையில் 16 வயது மைனர் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 40 வயது தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
திருவள்ளூர் ஜூலை 15 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை காலனியைச் சேர்ந்த 16 வயதான மைனர் பெண்ணை கானவில்லை என்று பொதடூர்பேட்டை காவல் நிலையத்தில் பெண்ணின் தந்தை புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவங்காடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (40) என்பவர் பொதடூர்பேட்டை காலனியில் தண்டுமாரியம்மன் கோயில் சீரமைப்பு பணிகள் செய்து வந்த போது 16 வயது சிறுமியிடம் பழகி உள்ளார்.
அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் மைனர் பெண்ணுடன் ஓட்டம் பிடித்தது உறுதிப்படுத்தி அவர்களை கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் கோயில் சீரமைப்பு பணிகள் செய்து வந்த கார்த்திக் சகஜமாக பேசி நம்பவைத்து கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக மைனர் பெண் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் கார்த்திக் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.