தண்ணீர் தேடி கிராமங்களில் வரும் மானை தெரு நாய்கள் கடித்து கொதறியதில் உயிரிழந்த சம்பவத்தால் பரபரப்பு

பதிவு:2023-07-15 15:06:01



தண்ணீர் தேடி கிராமங்களில் வரும் மானை தெரு நாய்கள் கடித்து கொதறியதில் உயிரிழந்த சம்பவத்தால் பரபரப்பு

தண்ணீர் தேடி கிராமங்களில் வரும் மானை தெரு நாய்கள் கடித்து கொதறியதில் உயிரிழந்த சம்பவத்தால் பரபரப்பு

திருவள்ளூர் ஜூலை 15 : திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே எஸ்.வி.ஜி. புரம் கடிகாச்சலம் காட்டில் ஏராளமான மான்கள் உள்ளன. வன விலங்குகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்துவதில் வனத்துறை தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால் சமீப காலமாக மான்கள் கிராமப்புறங்களில் வரும் போது தெரு நாய்கள் கடித்தும், கிணற்றில் தவறி விழுந்து இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

கடந்த 6 மாதங்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட மான்கள் இறந்துள்ளது. இந் நிலையில், திருத்தணி ஆர்.கே.பேட்டை மாநில நெடுஞ்சாலை எஸ்.வி.ஜி புரம் அருகில் சாலை பகுதியில் இருந்த புள்ளிமானை தெரு நாய்கள் கடித்து கொதறியதில் இறந்துள்ளது. மான் இறந்து கிடப்பதை பார்த்த கிராமமக்கள் திருத்தணி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து உயிரிழந்த மானை மீட்டு காப்பு காட்டி புதைத்தனர்.

மாநில நெடுஞ்சாலை அருகில் உள்ள கடிகாச்சலம் காட்டில் வன விலங்குகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் இரும்பு வேலி அமைக்க வேண்டும் என்றும் தண்ணீர் தொட்டிகள் அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று பல முறை வனத்துறையினருக்கு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக கிராமமக்கள் குற்றம் சாட்டினர்.