திருவள்ளூர் ராஜாஜிபுரம் தேவி மீனாட்சி நகரில் 7 ஆக்கிரமிப்புவீடுகள் இடித்து அகற்றம்

பதிவு:2023-07-21 20:12:44



திருவள்ளூர் ராஜாஜிபுரம் தேவி மீனாட்சி நகரில் 7 ஆக்கிரமிப்புவீடுகள் இடித்து அகற்றம்

திருவள்ளூர் ராஜாஜிபுரம் தேவி மீனாட்சி நகரில் 7 ஆக்கிரமிப்புவீடுகள் இடித்து அகற்றம்

திருவள்ளூர் ஜூலை 21 : திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த 27 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.இதனையடுத்து திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம் தேவி மீனாட்சி நகரில் பாதாள சாக்கடை சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அந்த சுத்திகரிப்பு நிலையம் அருகே நீர்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியிருந்தனர்.

இந்த வீடுகள் கடந்த 2005 ஆம் ஆண்டு கட்டி குடியிருந்து வந்தனர் . பின்னர் இந்த இடம் நீர்நிலை புறம்போக்கில் உள்ளதாக நீர்வளத்துறையினர் நோட்டீஸ் கொடுத்தனர்.இதனால் கடந்த 2015 ஆம் ஆண்டு பெரும்பாலானோர் வீடுகளை காலி செய்து சென்று விட்டனர்.

தற்போது குடி இருந்தவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து காலி செய்ய அவகாசம் கொடுக்கப்பட்டது .இதனையடுத்து 2 வீட்டில் மட்டும் குடித்தனமும், ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் 5 வீடுகளும் என 7 வீடுகளை ஜேசிபி எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா, நகரமைப்பு ஆய்வாளர் குணசேகரன் நகரமைப்பு அலுவலர் அந்தோணி தோஸ், நில அளவையர் தாலீப் மற்றும் பொதுப்பணித்துறை, மின்வாரியத்துறை ஆகியோருடன் இணைந்து ஜேசிபி எந்திரம் மூலம் நீர் நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டது.அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் திருவள்ளூர் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம்,சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கண்ணன் ஆகியோர் ஈடுபட்டனர்.