பதிவு:2023-07-21 20:15:53
திருவள்ளூர் மாவட்டத்தில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு சார்பாக அஸ்காட் திட்டத்தின் கீழ் கால்நடை உதவி ஆய்வாளர்களுக்கு பறவை காய்ச்சல் மற்றும் கன்று வீச்சு நோய்க்கான தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி
திருவள்ளூர் ஜூலை 21 : திருவள்ளூர் மாவட்டத்தில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு சார்பாக, அஸ்காட் திட்டத்தின் கீழ் கால்நடை உதவி ஆய்வாளர்களுக்கு பறவை காய்ச்சல் மற்றும் கன்று வீச்சு நோய்க்கான முன்னேற்பாடு மற்றும் தடுப்பு முறைகள் குறித்து ஒரு நாள் பயிற்சியும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாமும் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட, மண்டல இணை இயக்குநர் அ.செய்த்தூன் தலைமை தாங்கினார் . திருவள்ளூர் மாவட்ட உதவி கலெக்டர் (பயிற்சி) கேத்ரின் சரண்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் வெ.பாஸ்கர் வரவேற்புரையாற்றினார். திருத்தணி கோட்ட உதவி இயக்குநர் தாமோதரன் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் கோட்ட உதவி இயக்குநர்கள் சிவஞானம், பொன்னேரி செந்தில்நாதன், கால்நடை உதவி மருத்துவர்கள் நதியா, பிரேம் சீனிவாசன் திலகவதி மற்றும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் திருவள்ளூர் மாவட்ட அனைத்து கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பயிற்சியின் நிறைவாக கால்நடை நோய் புலனாய்வு பிரிவு, கால்நடை உதவி மருத்துவர் ஜெ.செல்வபிரியா நன்றி கூறினார்.