பூந்தமல்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை : போலீஸ் விசாரணை

பதிவு:2023-07-21 20:20:04



பூந்தமல்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை : போலீஸ் விசாரணை

பூந்தமல்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை : போலீஸ் விசாரணை

திருவள்ளூர் ஜூலை 21 : பூந்தமல்லியில் டிரங்க் சாலையில் அரசு தாலுகா மருத்துவமனை உள்ளது. பூந்தமல்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினம் தோறும் இங்கு வந்து பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். 24 மணி நேரமும் இயங்கி வரும் இந்த மருத்துவமனை வளாகத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி நிலையில் காணப்பட்டார்.இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அந்த வாலிபரை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த மருத்துவமனையின் வளாகத்தில் பின்புறம் உள்ள ஷெட்டில் காக்கி நிற உடை அணிந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். அந்த வாலிபர் மருத்துவமனை வளாகத்திற்கு வந்த சிறிது நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த நிலையில் கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.தற்கொலை செய்து கொண்டு இறந்து போன நபர் யார், எதற்காக தற்கொலை செய்து கொண்டார், தற்கொலை தானா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். பூந்தமல்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் வாலிபர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.