பதிவு:2022-05-07 17:34:20
திருவள்ளூரில் நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கான பயிற்சி மற்றும் புத்துணர்வு முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்
திருவள்ளூர் மே 07 : திருவள்ளூர் நகராட்சி, எடப்பாளையம், தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறை சார்பாக நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கான பயிற்சி மற்றும் புத்துணர்வு முகாமை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக மாவட்டத்தில் இருக்கக் கூடிய அனைத்து கூட்டுறவு துறை சார்ந்த அதிகாரிகளும் சேர்ந்து முழு முயற்சிக்க மேற்கொள்ள வேண்டும். அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற 1,112 நியாய விலைக் கடைகளை சார்ந்த 650-க்கும் மேற்பட்ட பணியார்களுக்கு பயிற்சி நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கான பயிற்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி என்பது நம் திருவள்ளுர் மாவட்டம் ஒரு முன் மாதிரியான மாவட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பொதுமக்களை பொறுத்தவரை அவர்களுக்கு தரமான பொருட்களை, சரியான எடையில் கொடுப்பது தான் அரசுடைய திட்டம்.அப்படி கொடுப்பதற்கு அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு அதிகாரியை நியமித்து, வாரத்திற்கு ஒரு கடை என்ற முறையில் திடீர் ஆய்வு நடைபெற்று வருகிறது. வட்ட வழங்கல் அலுவலரும், இணை பதிவாளர் கூட்டுறவுத் துறையிலிருந்தும் வாரம், வாரம் கடைகளை ஆய்வு செய்து, அந்த ஆய்வு அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. எனவே, திருவள்ளூர் மாவட்டத்தை பொது விநியோக திட்டத்தில் ஒரு முன்மாதிரியான மாவட்டமாக கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக, கூட்டுறவுத்துறை சார்பாக நடத்தப்படும் நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கான பயிற்சி மற்றும் புத்துணர்வு முகாமில் விற்பனையாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விற்பனை பணியை திறம்பட மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கான பயிற்சி மற்றும் புத்துணர்வு முகாமில் கலந்து கொள்ளும் விற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பயிற்சி கையேடுகளை வழங்கினார். தொடர்ந்து, விற்பனை பணியை திறம்பட மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையிலான கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியர் கையெழுத்திட்டு, துவக்கி வைத்தார்
இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, துணைப்பதிவாளர்கள் ரவி(பொது விநியோகத்திட்டம்), அ.கார்த்தவராயன் (திருவள்ளூர்), கண்ணன் (திருத்தணி), சி.வி.கருணாகரன்(பொன்னேரி), செல்வி(பணியாளர் அலுவலர்), கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், நியாய விலைக்கடைகளின் விற்பனையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.