திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் 1847 மாணவ மாணவிகளுக்கு ரூ.89.03 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதி வண்டியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

பதிவு:2023-07-24 23:00:59



திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் 1847 மாணவ மாணவிகளுக்கு ரூ.89.03 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதி வண்டியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் 1847 மாணவ மாணவிகளுக்கு ரூ.89.03 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதி வண்டியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

திருவள்ளூர் ஜூலை 22 : திருவள்ளூர் மாவட்டம், மணவாளநகரில் உள்ள கே.இ.என்.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக 1,847 மாணவ மாணவியர்களுக்கு ரூ.89.03 இலட்சம் மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.இதில் சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 1847 மாணவ மாணவிகளுக்கு 89.03 லட்சம் மதிப்பீட்டில் விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் கடம்பத்தூர் மற்றும் பூண்டி ஆகிய வட்டாரங்களைச் சார்ந்த அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் 15 பள்ளிகளில் பயிலும் 1,847 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ரூ.89,03,440 மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை 2022-2023 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயின்ற 6,645 மாணவர்களுக்கும் 10,889 மாணவ மாணவியர்களுக்கும் என மொத்தம் 17,526 மாணவ- மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவதற்கு ரூ.8.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிகராக மட்டுமல்லாது தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கி அவர்கள் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மாணவ மாணவிகள் நன்றாக படிக்க வேண்டும் உயர்கல்வியில் சேர்ந்து பட்டங்களை பெற்று வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என பேசினார்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஒ.சுகபுத்ரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.சரஸ்வதி, திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், திமுக நிர்வாகிகள் கே திராவிட பக்தன், ஆர்.டி .இ.ஆதிசேஷன், கே. அரிகிருஷ்ணன், மோ. ரமேஷ்,வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா பாலயோகி,பாமக மேற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன் நன்றி தெரிவித்தார்.