திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் ஆய்வு

பதிவு:2023-07-24 23:02:14



திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் ஆய்வு

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் ஆய்வு

திருவள்ளூர் ஜூலை 22 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகிற 07.08.2023 முதல் 11.08.2023 வரை ஆடி கிருத்திகை திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு அத்திருக்கோயில் வளாகத்தில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் திருக்கோயில் மூலம் செய்யப்படவுள்ள முன்னேற்பாட்டு பணிகள் குறித்தும் அதில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தருதல் கழிப்பறை வசதிகள் குளியல் அறை வசதிகள் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தல் தகவல் ஒலிபெருக்கி அமைத்தல் மருத்துவ மற்றும் சுகாதார சுற்றுச்சூழலை ஏற்படுத்துதல் பக்தர்களுக்கான வரிசை அமைப்பு மற்றும் பந்தல் அமைப்பு முறையை ஏற்படுத்துதல் தீயணைப்பு ஊர்தியை நிறுத்தி உரிய பாதுகாப்புக்கு வழி வகுத்தல் பக்தர்களுக்கான தகவல் நிலையம் அமைத்தல் பக்தர்களுக்கான சேவை மையம் அமைத்தல் பக்தர்களுக்கான வாகனங்கள் நிறுத்தும் வசதியை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

திருத்தணி, நந்தி ஆற்றங்கரை, ஆறுமுகசுசாமி திருக்கோயில் வளாகத்தில் திருக்கோயிலில் இறைப்பணியில் ஈடுபட்டு இறைவனடி சேர்ந்த திருக்கோயில் யானைகளை சிறப்பிக்கும் வகையில் ரூ.49.50 இலட்சம் மதிப்பீட்டில் யானைகளுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கும், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் தணிகை இல்ல வளாகத்தில் ரூ.34.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குடில்கள் மற்றும் ரூ27.50 இலட்சம் மதிப்பீட்டில் மலைகோவிலுக்கு செல்லும் படி வழியில் மூன்று நிழல் மண்டபங்கள் ஆகிய கட்டிடப் பணிகளுக்கும் அமைச்சர்கள் அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை துவக்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் தணிகை இல்ல வளாகத்தில் உள்ள குடில்கள் ரூ99 இலட்சம் மதிப்பீட்டில் சிறப்பு மராமத்து செய்து முடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அக்குடில்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர்கள் திறந்து வைத்து, திருத்தணி, தெக்களூர் நீரேற்று நிலையத்தில் உபயதாரர் மூலம் 500 மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தனர்.

மேலும், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரூ5 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட பேட்டரி காரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தொடர்ந்து, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ2.80 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நவீன நீராவி அடுப்பு மற்றும் நவீன உணவு தயாரிப்பு குக்கரை பயன்பாட்டுக்காக துவக்கி வைத்து ரூ1.40 இலட்சம் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்டுள்ள அன்னதான கூடத்தை வைத்து பார்வையிட்டனர்.

இந்நிகழ்வுகளில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கே.வி.முரளிதரன்,மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சீபாஸ் கல்யாண், மாவட்ட வன அலுவலர் ராம்மோகன்,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஒ.சுகபுத்ரா, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள், இணை ஆணையர் ரமணி, துணை ஆணையர் விஜயா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.