திருவள்ளூர் அடுத்த மப்பேட்டில் ஜிம் மாஸ்டரை அரிவாலால் வெட்டிய மர்ம கும்பல் மப்பேடு போலீசார் விசாரணை

பதிவு:2023-07-24 23:05:02



திருவள்ளூர் அடுத்த மப்பேட்டில் ஜிம் மாஸ்டரை அரிவாலால் வெட்டிய மர்ம கும்பல் மப்பேடு போலீசார் விசாரணை

திருவள்ளூர் அடுத்த மப்பேட்டில் ஜிம் மாஸ்டரை அரிவாலால் வெட்டிய மர்ம கும்பல் மப்பேடு போலீசார் விசாரணை

திருவள்ளூர் ஜூலை 22 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த சின்ன மண்டலி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (23). உடற்பயிற்சி கூட பயிற்சியாளரான இவர் மப்பேடு பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு உடற்பயிற்சி முடிந்த பின் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது மணியை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து கட்டை மற்றும் அரிவாளால் சரமாரியாக தாக்கினர். மணியின் அலறும் சத்தம் கேட்டு அவ்வழியாக வந்தவர்கள் மப்பேடு போலீசுக்கு தகவல் அளித்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்த மணியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து முதல் சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே மணி வீட்டு அருகே நில தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நில பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களா என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.