திருவள்ளூர்- மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்புடன் சமூகப்பணி கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடல்

பதிவு:2023-07-24 23:07:48



திருவள்ளூர்- மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்புடன் சமூகப்பணி கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடல்

திருவள்ளூர்- மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்புடன் சமூகப்பணி கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடல்

திருவள்ளூர் ஜூலை 24 : திருவள்ளூர் அருகே ஈக்காடு கிராமத்தில் வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் நோக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுடன் சென்னை சமூக கல்லூரியின் (மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரப்படுத்துதல்) முதுகலை மாணவ, மாணவிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அப்போது, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள், சமூகத்தில் வாழ்வாதாரம் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

அப்போது, இன்றைய சூழலில் எந்த அளவில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் உள்ளன என்று சொல்லும் சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தெந்த வகையில் உதவு முடியும் என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் மாணவர்கள் உறுதி அளித்தனர்.

அப்போது, அந்தக் கல்லூரியின் பேராசிரியர் (மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரப்படுத்துதல் துறைத் தலைவர்) ஜஸ்வின், துணைப்பேராசிரியர் ஸ்ரீதர், ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் ஸ்டீபன், வசந்தம் கூட்டமைப்பின் நிர்வாகிகள் லிவிங்ஸ்டன், ஜெயச்சந்திரன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.