பதிவு:2023-07-24 23:09:09
மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் ஜூலை 24 : மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் மு. வா. சித்தார்த்தன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அருண்கௌதம், தளபதிசுந்தர், கைவண்டுர் செந்தில், எஸ் கே குமார், திருவரசு, பூண்டி இளவரசு, வே.யோகா, திராவிடமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில அரசியல் குழுச் செயலாளர் நீலவானத்து நிலவன் கண்டன உரையாற்றினார்.
இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெறும் இடத்தில் கடந்த 80 தினங்களுக்கும் மேலாக கலவரம் நடைபெற்று வருகிறது.இதை மணிப்பூர் மாநில அரசு மத்திய அரசும் கட்டுப்படுத்த தவறிவிட்டனர். இந்த கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டு ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும் மத்திய மாநில அரசுகள் மௌனம் காத்து வருகிறது.
கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் குறித்தும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மணிப்பூரில் பாஜக அரசின் ஆட்சியை கலைத்து விட்டு குடியரசு தலைவரின் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஐசக், கொட்டையூர் ஈசன், பூண்டி ராஜா, ஜார்ஜ்முல்லர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொறுப்பாளர் அம்பி பாலாஜி நன்றி கூறினார்.