திருத்தணி முருகன் கோயில் நடைபெற்ற ஆடிப்பூரம் விழா : பக்தர்கள் உடலில் அலகு குத்தியும், பால்காவடி, புஷ்பகாவடி பன்னீர் காவடிகள் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திகடன் :

பதிவு:2023-07-24 23:10:13

திருவள்ளூர் ஜூலை 24 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாது அண்டை மாநிலங்களான பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதியில் இருந்து வேன், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்கின்றனர்.இந்நிலையில் இன்று ஆடிப்பூரம் விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு மூலவ முருகப்பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் அபிஷேகம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து உற்சவ முருகப்பெருமானுக்கு 1008 பால் குட அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடந்தது. ஆடிப்பூரம் விழாவில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உடலில் அலகு குத்தியும், பால்காவடி, புஷ்ப காவடி, எடுப்பது பன்னீர் காவடி, மயில் காவடிகள் எடுத்து சரவணப் பொய்கையில் நீராடி மலைப்படிகள் வழியாக முருகப்பெருமானின் ஆடல் பாடலுடன் கோயிலை வந்தடைந்தனர். அங்கு சுமார் நீண்ட வரிசையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

வள்ளி தெய்வானை முருகனுக்கு பால் அபிஷேகமும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இந்த ஆடிப்பூர விழாவில் சென்னை மாதவரம், காசிமேடு, வளசரவாக்கம், தண்டையார்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ஆற்காடு உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.