அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலம் குடியிருந்து வரும் மக்களுக்கு குடிமனை பட்டா கேட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம்

பதிவு:2022-05-07 17:38:39



அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலம் குடியிருந்து வரும் மக்களுக்கு குடிமனை பட்டா கேட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம்

அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலம் குடியிருந்து வரும் மக்களுக்கு குடிமனை பட்டா கேட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம்

திருவள்ளூர் மே 07 : திருவள்ளூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக தண்ணீர் தேங்காத கரம்பாக உள்ள புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1000-த்திற்கும் மேற்பட்டோர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் ஆர்.தமிழரசன்,எஸ்.இ.சேகர்,ஜே.ராபர்ட் எபிநேசர்,ஏ.ஜி.கண்ணன்,இ.ஜெயவேல்,வி.அந்தோணி,இ.ராஜேந்திரன்,ஜி.வி.எல்லைய்யன்,எஸ்.ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சட்டமன்றக்குழு தலைவர் நாகை மாலி,மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ப.சுந்தரராசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

அப்போது நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி வீடுகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும்,மாற்று இடம் என்ற பெயரில் உள்ளூரில் வசிக்கும் மக்களை வெகு தூர ஊருக்கு அனுப்பக்கூடாது என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் அனைத்து கோவில் இடங்களில் வசிக்கும் மக்களுக்கு இடத்திற்கான தொகையை நிர்ணயித்து தவணை முறையில் கிரையம் செய்து பட்டா வழங்க வேண்டும்,அரசு புறம்போக்கு மற்றும் இதர வகை இடங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் வீடு கட்டும் திட்ட தொகையினை ரூபாய் 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனால் பொது மக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே இலேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்களை மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்று மனுவை கொடுத்தனர் .இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

போராட்டத்தில் மாவட்ட செயற்குழு நிர்வாகிகள் டி.பன்னீர்செல்வம், கே.விஜயன்,சி.பெருமாள்,கே.ராஜேந்திரன்,ஜி.சம்பத்,இ.மோகனா, பி.துளசிநாராயணன்,ஏ.ஜி.சந்தானம் உட்பட 1000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.