பதிவு:2023-07-26 09:05:48
திருவள்ளூரில் தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு - டாக் ஆதிவாசி இருளர் முன்னேற்ற சங்கம் மற்றும் ஜெய்பீம் பழங்குடியினர் புதுவாழ்வு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் ஜூலை 25 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு - டாக் ஆதிவாசி இருளர் முன்னேற்ற சங்கம் மற்றும் ஜெய்பீம் பழங்குடியினர் புதுவாழ்வு சார்பில் மணிப்பூரில் பழங்குடி பெண்களை நிர்வாணமாக்கி வன்புணர்வு செய்த கலவரக்காரர்களையும், துணை போகும் ஒன்றிய பாஜக அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் கலவரத்தை கண்டு கொள்ளாத மணிப்பூர் மாநில முதல்வர் பைரவன்சிங்கை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், பாலியல் வன்முறை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்,அடையாளம் தெரியாத கும்பல் எனக் கூறி குற்றவாளிகளை பாதுகாக்க கூடாது என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் இடம் மனு அளித்தனர்.பின்னர் அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.