பதிவு:2023-07-26 09:08:10
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு 4 மாவட்டங்களில் 4 ஆட்சி மொழிக் கருத்தரங்குகள் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவிப்பு
திருவள்ளூர் ஜூலை 25 : முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஒரு வாரத்திற்கு 4 மாவட்டங்களில் 4 ஆட்சி மொழிக் கருத்தரங்குகள் என்றவாறு 38 மாவட்டங்களில் 6 திங்களில் 100 கருத்தரங்குகள் நடத்திடுவதற்கு திட்டமிடப்பெற்றுள்ளது.
அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 27.07.2023 அன்று ஆட்சி மொழிக் கருத்தரங்கம் திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
அரசு அலுவலர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் ஆகியோர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் இக்கருத்தரங்கத்தில் கலந்து கொள்ளலாம்.
இக் கருத்தரங்கம் காலை 10 மணியளவில் தொடங்கி மாலை 05.30 மணி வரை நடைபெறும். பங்கேற்பவர்களுக்குத் தேநீர், குடிநீர், மதிய உணவு, குறிப்பேடு, எழுதுகோல் ஆகியன வழங்கப்பெறும்.
இக்கருத்தரங்கில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.