திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் ஆய்வு

பதிவு:2023-07-30 22:00:48



திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் ஆய்வு

திருவள்ளூர் ஜூலை 29 : திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் பயனாளிகள் மற்றும் தன்னார்வலர்களோடு கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கினார்.

முதலாவதாக, திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், எஸ்.வி.ஜி.புரம் ஊராட்சி கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாமையும் திருத்தணி வட்டத்திற்குட்பட்ட கே.ஜி.கண்டிகை ஊராட்சி மற்றும் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்களையும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் வட்டத்திற்குட்பட்ட பட்டரைபெரும்புதூரில் உள்ள இ சேவை மையம் மற்றும் திருப்பாச்சூர் ஊராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்களையும் ஊத்துக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட அம்மம்பாக்கம் சித்தேரி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்களையும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அம்முகாம்களில் உள்ள பயனாளிகளோடு கலந்துரையாடி கருத்துகளை கேட்டறிந்தார்.

மேலும், திருவள்ளூர் வட்டத்திற்குட்பட்ட வெங்கல் மகளிர் சுய உதவி குழு கட்டிடம் மற்றும் நத்தமேடு நூலக கட்டிடம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்களையும் ஆவடி வட்டத்திற்குட்பட்ட திருநின்றவூர் கோமதிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் திருநின்றவூர் தாசர் உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்களையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி), எஸ்.சந்திரன் (திருத்தணி),டி.ஜெ. கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் க.தீபா, வட்டாட்சியர்கள் எஸ்.விஜயகுமார் (ஆவடி), கே. சுரேஷ் குமார் (திருவள்ளூர்), ஜி.விஜயகுமார் (ஆர்.கே.பேட்டை), மதன் (திருத்தணி), எஸ்.வசந்தி (ஊத்துக்கோட்டை), தனி வட்டாட்சியர் சங்கிலிரதி, திருநின்றவூர் நகராட்சி ஆணையர் மா.புஹேந்திரி, ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன், ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல், மாவட்ட திட்டக்குழு (நகர்ப்புற உள்ளாட்சி) உறுப்பினர் அபிராமி குமரவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள்,தன்னார்வலர்கள்,பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.