திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸை கைது செய்ததைக் கண்டித்து மணவாள நகரில் சாலை மறியல் போராட்டம்

பதிவு:2023-07-30 22:03:44



திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸை கைது செய்ததைக் கண்டித்து மணவாள நகரில் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸை கைது செய்ததைக் கண்டித்து மணவாள நகரில் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூர் ஜூலை 29 : கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடந்த ஒரு வருடமாக என்.எல்.சி நிர்வாகம் மூன்று மோகம் விலையக்கூடிய நெற்பயிர்களை அழித்து நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று தமிழின போராளி மருத்துவர் அய்யா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று என்.எல்.சி நிர்வாகம் அந்த விவசாய நிலத்தில் கனரக வாகனங்களை வைத்து தூய்மை செய்தது.அதனை கண்டித்து நெய்வேலியில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளால் நடத்தப்பட்டது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு அறவழியில் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த போது காவல்துறையால் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ் குமார் தலைமையில் திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மணவாள நகரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்கிற பாலயோகி, திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளர் நா. வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் யோகானந்தம், கண்ணன்,குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு 1 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பொழுது மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்கிற பாலயோகி பேசுகையில் 1987 ல் மிகப்பெரிய போராட்டத்தை நடத்திய வன்னிய சங்கம்,இந்தியாவில் 21 உயிர்களை இட ஒதுக்கீட்டிற்காக தியாகம் செய்த இந்த சங்கம் நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம். தமிழின போராளி மருத்துவர் அய்யா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கண் அசைவிற்காக காத்துக் கொண்டிருக்கின்றோம். மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை விடுதலை செய்யும் வரையில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்க நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் போராட்டத்தையும்,ஆர்பாட்டத்தையும் தொடர்வார்கள் என்று கூறினார்.

இதனால் திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் வானங்கள் நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூர் ஏ.எஸ்.பி விவேகானந்தா சுக்லா,துணை வட்டாட்சியர் லில்லி,வருவாய் ஆய்வாளர்கள் விஷ்ணுபிரியா,வெங்கடேஸன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். இதனால் திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.