பதிவு:2023-07-30 22:05:19
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி. ரமணா முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்
திருவள்ளூர் ஜூலை 29 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி. ரமணா முன்னிலையில் பாமக நிர்வாகி சீனிவாசன் தலைமையில் பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுகவில் இணைந்த இளைஞர்களை சால்வை அணிவித்து முன்னாள் அமைச்சர் பி வி ரமணா உற்சாகமாக வரவேற்றார்.அதே போல வருகிறதாம் தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு சம்பந்தமான டிஜிட்டல் போர்டையும் அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் பி ரமணா வரும் நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு அதிமுக வெற்றிக்கு பாடப்பட வேண்டும் என்றும், வெற்றிக்குப் பின்னால் தங்களுடைய உழைப்புக்கு ஏற்றார் போல பதவிகள் தானாக வந்து சேரும் என்றும் தெரிவித்தார்.
இதில் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர் நகர செயலாளர் கந்தசாமி நிர்வாகிகள் வேல்முருகன் எழிலரசன், ஞானகுமார், ராஜி, உள்ளிட்ட அதிமுக ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.