பதிவு:2023-07-30 22:06:52
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளி மாணவ மாணவிகள் 1000 பேர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் படத்திற்கு வண்ணம் தீட்டியும், அவரது படத்தை மெழுகுவர்த்தி ஒளியால் உருவாக்கியும் சாதனை
திருவள்ளூர் ஜூலை 29 : திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் பாரத ரத்னா டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் விஷ்ணு சரண் தலைமை தாங்கினார்.பள்ளி இயக்குனர் பரணிதரன் முன்னிலை வகித்தார்.பள்ளி முதல்வர் டாக்டர். ஸ்டெல்லா ஜோசப் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பாரத ரத்னா டாக்டர். ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் கலாம் அவர்களின் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.சின்னஞ்சிறு தொடக்கக் கல்வி மாணவர்கள் கலாம் படத்திற்கு வண்ணம் தீட்டி மகிழ்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து தொடக்கக்கல்வி முழுவதும் 1000 மாணவர்கள் வரிசையாக அமர்ந்து, கலாம் அவர்களின் படத்திற்கு வண்ணம் தீட்டியது, கலாம் அவர்களை நேரில் பார்த்தது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தியது.ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளி, 10 -ஆம் வகுப்பு மாணவர்கள் 25 அடி உயர கலாம் அவர்களின் படத்தை வரைந்து, அதில் மெழுகுவர்த்தி ஏற்றி, தீப ஒளியில் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழகமே போற்றும் வண்ணம், முழு மதிப்பெண் பெற்று கலாம் அவர்களுக்கு பெருமை சேர்ப்போம் என்று ஸ்ரீ நிகேதன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் உறுதி ஏற்றுக் கொண்டனர்.இதில் துணை முதல்வர் கவிதா கந்தசாமி, தலைமை ஆசிரியர்கள், டாக்டர்.ஷாலினி சுஜாதா மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.