தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழா நேரலை ஒளிபரப்பு : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் போதைப் பொருளுக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை துவக்கி வைத்தார்

பதிவு:2023-08-12 20:56:13



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழா நேரலை ஒளிபரப்பு : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் போதைப் பொருளுக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை துவக்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்

திருவள்ளூர் ஆக 12 : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழா நேரலையில் திருவள்ளூர் மாவட்டம், மணவாளநகர், கே.இ.என்.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒளிபரப்பப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் போதைப் பொருளுக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

முதலாவதாக, சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு திருவள்ளூர் மாவட்டம், மணவாளநகர், கே.இ.என்.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அப்பள்ளியில் உள்ள பள்ளி மாணவ-மாணவியர்கள், ஆசிரியர்கள் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்டோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் பங்கு பெற்று விழாப்பேருரையாற்றிய நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டதை மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவ-மாணவியர்களுடன் அவ்விழா நிகழ்வுகளை பார்வையிட்டார். தொடர்ந்து அப்பள்ளி வளாகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து "SAY NO DRUG"- என்ற மனித உருவாக்கத்தில் பள்ளி மாணவ-மாணவியர்கள் பங்கு பெற்று விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ மாணவியர்களை பாராட்டினார்.

மேலும், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரிடத்திலும் கொண்டு செல்லும் விதமாக மணவாளநகர்,கே.இ.என்.சி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து, துவக்கி வைத்தார். பேரணியானது, திருவள்ளூர் இரயில் நிலையம் வரை சென்று மீண்டும் அப்பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. இப்பேரணி சுமார் 2கி.மி தொலைவிற்கு நடைபெற்றது. இப்பேரணியில் சுமார் 600க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டு, போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியின் போது, போதைப் பொருளுக்கு எதிரான வாசகங்களையும் மாணவ மாணவியர்கள் உரக்கச் சொல்லி பொதுமக்களியே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.சரஸ்வதி, ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.