பதிவு:2022-05-07 17:41:33
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருவள்ளூர் மே 07 : திருவள்ளூரில் உள்ள வீரராகவர் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரமோற்சவ விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இவ்விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமாகும்.10 நாட்களும் வெவ்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமாகும்.
அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை மாத பிரம்மோற்சவ விழா 6 ம் தேதி காலை 4.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதனைத் தொடர்ந்து காலை தங்க சப்பரத்திலும்,இரவு சிம்ம வாகனத்திலும், உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ராக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் 2 ம் நாள் காலை ஹம்ஸ வாகனத்திலும்,இரவு ஸீர்ய ப்ரபை, பிரம்மோற்சவ விழாவின் 3-ம் நாளான வருகிற 8-ந்தேதி காலை கருட சேவை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.இரவு ஹனுமந்த வாகனம்,நான்காம் நாள் காலை சேஷ வாகனம்,இரவு சந்திர ப்ரபை,ஐந்தாம் நாள் காலை நாச்சியார் திருக்கோலம்,இரவு யாளி வாகனம் நடைபெறவுள்ளது.
ஆறாம் நாள் காலை வேணுகோபாலன் திருக்கோலம்,வெள்ளி சப்பரம்,இரவு யானை வாகனத்திலும் ஏழாம் நாளான வருகிற 12-ந்தேதி காலை 7.30 மணிக்கு தேர் திருவிழாவும், இரவு திருத்தேரிலிருந்து பெருமாள் எழுந்தருளுதல், எட்டாம் நாள் காலை திருமஞ்ஜனம்,இரவு குதிரை வாகனத்தில் அருள்பாலிப்பார். ஒன்பதாம் நாளான 14-ந்தேதி காலை ஆள்மேல் பல்லக்கு,திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.இரவு விஜயகோடி வாகனம்,10 ம் நாளான கடைசி நாள் காலை திருமஞ்ஜனம்,இரவு கண்ணாடி பல்லக்கு என உற்சவர் வீரராகவர் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தேவஸ்தானம் சார்பில் செய்து வருகின்றனர்