பட்டாபிராமில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 1491 நபர்களுக்கு பணி ஆணைகள் : அமைச்சர்கள் வழங்கினர்

பதிவு:2023-08-14 20:16:53



பட்டாபிராமில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 1491 நபர்களுக்கு பணி ஆணைகள் : அமைச்சர்கள் வழங்கினர்

பட்டாபிராமில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 1491 நபர்களுக்கு பணி ஆணைகள் : அமைச்சர்கள் வழங்கினர்

திருவள்ளூர் ஆக 14 : முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம், இந்து கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 151 நிறுவனங்கள் பங்கு பெற்று தங்கள் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு நடத்தப்பட்ட பல்வேறு தேர்வு முறைகளில் தேர்ச்சி பெற்று தேர்வுசெய்யப்பட்ட 1491 நபர்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் பணி ஆணைகளை வழங்கி, முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முன்னிலையில் வாழ்த்து தெரிவித்தனர். தேர்வு செய்யப்பட்ட 1491 நபர்களில் ஆண்கள் 138 நபர்களும் பெண்கள் 69 நபர்களும் 6 மாற்றுத்திறனாளிகள் உட்பட 213 நபர்களுக்கு நேரடி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. இதர 1278 நபர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்காக தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம் இந்து கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, இம்மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, இம்மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட 1000 நபர்களுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தியும் சுற்றுச்சூழலை பாதுகாத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் 1000 மஞ்சப்பைகளை அமைச்சர்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பகராஜ்,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி),மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் என்.ஓ.சுகபுத்ரா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநர் ஆ.ஜோதிமணி, உதவி இயக்குநர் விஜயா, தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் மலர்வழி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சபரி, இந்து கல்லூரி முதல்வர் ஜி.கல்விக்கரசி, உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.