முன்னாள் எம்பி., திருத்தணி கோ.ஹரி தலைமையில் மதுரையில் நடைபெறும் பொன் விழா மாநாட்டிற்கு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

பதிவு:2023-08-14 20:19:40



முன்னாள் எம்பி., திருத்தணி கோ.ஹரி தலைமையில் மதுரையில் நடைபெறும் பொன் விழா மாநாட்டிற்கு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

முன்னாள் எம்பி., திருத்தணி கோ.ஹரி தலைமையில் மதுரையில் நடைபெறும் பொன் விழா மாநாட்டிற்கு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

திருவள்ளூர் ஆக 14 : அதிமுக சார்பாக வீரவரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு வரும் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாடு அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் நகரில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் எஸ்.ஏ.நேசன் ஏற்பாட்டில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் கமேண்டோ பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

இதில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திருத்தணிகோ.ஹரி கலந்து கொண்டு இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் ஆகியவற்றில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அதேபோல் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மணவாள நகரில் மாவட்ட பாசறை செயலாளர் ஒன்றிய கவுன்சிலருமான எம்.நரேஷ்குமார் ஏற்பாட்டில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் பொ.பூபாலன், டி.ஜெயச்சந்திரன், கிளைக் கழக நிர்வாகிகள் கே.ஆதித்யன், பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்கள் ராம்தாஸ், ராகவன், வெங்கடேசன், கடம்பத்தூர் தணிகா முரளி உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

20-ஆம் தேதி நடைபெறும் மதுரை மாநாட்டிற்கு அதிமுக தொண்டர்கள் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து அழைத்து செல்வதற்கு தயார் நிலையில் இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருத்தணி கோ.ஹரி தெரிவித்தார்.