பதிவு:2023-08-14 20:24:56
திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலைவர் தொல் திருமாவளவன் மணிவிழா மற்றும் மாவட்ட செயற்குழு கூட்டம்
திருவள்ளூர் ஆக 14 : திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மணி விழா மற்றும் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எம்.கே.நேரு, எஸ்.கே.குமார், திருவரசு, சா.நரசிம்மன், நெடும்பரம் ஞானம், பிரையங்குப்பம் டில்லி, ஆர்கே பேட்டை குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் தொகுதி செயலாளர் இரா.வே.யோகா அனைவரையும் வரவேற்றார்.
இதில் தலைமை நிலைய செயலாளர் அ.பாலசிங்கம், மாவட்ட செயலாளர்கள் வே.அருண் கௌதம், சி நீலமேகம் ஆவடி மு. ஆதவன், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மண்டல செயலாளர் மு.வ. சித்தார்த்தன் பாராளுமன்ற தொகுதி செயலாளர் நெடுஞ்செழியன் பாராளுமன்ற தொகுதி துணை செயலாளர் இளவரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
இதில் மாநில பொறுப்பாளர்கள் து. கௌதமன்கோபு, பேராசிரியர் உதயபானு, வெளிச்சம் பிரவீன், கைவண்டூர் செந்தில், மாவட்ட அமைப்பாளர்கள் பா.செந்தில், அழகன் (எ) முருகன், சார்லஸ், மு. ச. தமிழ் வளவன், தனசேகர், தமிழ் முதல்வன், கோதண்டன், பா.ஐசக், அரங்கநாதன் ,சஞ்சீவி மாருதி , எஸ். அன்பு, பாஸ்கர் , அர்ஜுன், ஒன்றிய செயலாளர்கள் பூண்டி வே. ராஜா, ஈசன் சுரேஷ், இளஞ்செழியன், தமிழ்ச்செல்வன் , பன்னீர் , வெங்கடேசன், ஆறுமுகம், ஆர். பிரபு, சத்யா, சியாம், கேசவன் , பப்லு மற்றும் மாவட்ட துணை அமைப்பாளர்கள் நகர பேரூர் செயலாளர்கள், வழக்கறிஞர் சதீஷ் குமார், இளைஞர் அணி துணை அமைப்பாளர் கரிக்கலவாக்கம் விஜி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணி மேற்கொள்வது, பாராளுமன்ற தொகுதி முழுவதும் பூத் கமிட்டி அமைப்பது, தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு கிராமம் தோறும் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் திருவள்ளூர் நகர செயலாளர் க முத்தமிழன் நன்றி கூறினார்.