மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

பதிவு:2023-08-15 12:04:31

திருவள்ளூர் ஆக 15 : மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் திருவள்ளூரில்அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் திருத்தணி எம்எல்ஏ.வுமான எஸ். சந்திரன் தலைமை தாங்கினார்.

திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிட பக்தன், மாநில விவசாய பிரிவு செயலாளர் ஆர்டிஇ. ஆதிசேஷன், நகர செயலாளர் சி. சு.ரவிச்சந்திரன்,நகர மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன், நிர்வாகிகள் வி.சி.ஆர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் கிரண், துணை அமைப்பாளர்கள் புவனேஷ் குமார், சுகுமார், தா.மோதிலால், டி.கே.பாபு, டி.ஆர்.திலீபன் ஆகியோர் வரவேற்றனர்.இதில் திமுக இளைஞரணி மாநில துணை செயலாளர் அப்துல் மாலிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இதில் ஒன்றிய செயலாளர்கள் மோ.ரமேஷ், மகாலிங்கம் , அரிகிருஷ்ணன், வழக்கறிஞர் பி. கே. நாகராஜ், நகர திமுக அமைப்பாளர் பவளவண்ணன், நகர துணை செயலாளர் கைலாசம், மாவட்ட பிரதிநிதி குப்பன், எஸ்.டி. பி. சம்பத் ராஜா மாவட்ட பிரதிநிதி சிவகுமார், நகர் மன்ற உறுப்பினர்கள், அணிகளின் பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.