பழவேற்காடு முகத்துவார பணிகளை ஆய்வு செய்ய படகில் சென்ற பா.ஜ.கவின் மாநில செயலாளர் உள்பட 30 பேரை கைது செய்த காவல் துறையை கண்டித்து திருவள்ளூரில் பா.ஜ.கவினர் சாலை மறியல்

பதிவு:2023-08-15 12:07:25

திருவள்ளூர் ஆக 15 : பழவேற்காடு முகத்துவார பணிகளை ஆய்வு செய்ய படகில் சென்ற பா.ஜ.கவின் மாநில செயலாளர் உள்பட 30 பேரை கைது செய்த காவல் துறையை கண்டித்து திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையில் உள்ள காமராஜர் சிலை முன்பு அந்தக் காட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.கவின் நகரத் தலைவர் சதீஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆர்யா சீனிவாசன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பழவேற்காடு முகத்துவாரத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்வதற்காக பா.ஜ.கவின் மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வா தலைமையில் 30 பேர் சென்றனர். அப்போது, அங்கு செல்லக்கூடாது என வழிமறித்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அதனால் காவல் துறையை கண்டித்தும், கைது செய்த மாநில செயலாளரை விடுவிக்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் மறியலில் மாவட்ட மகளிரணி செயலாளர் சித்ராதேவி, மண்டல தலைவர்கள் பழனி, சுரேஷ், நிர்வாகிகள் சேகர், சீரஞ்சீவி உள்ளிட்ட அக்கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.