பேரூராட்சிகளின் ஆணையர் நேரில் ஆய்வு

பதிவு:2022-05-08 06:44:24



பேரூராட்சிகளின் ஆணையர் இரா.செல்வராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

பேரூராட்சிகளின் ஆணையர் நேரில்  ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, ஆரணி மற்றும் நாரவாரிகுப்பம் ஆகிய பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், பையோ மைனிங் பணிகள், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் சாலைப் பணிகள், மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள், பொதுக் கழிப்பிடங்கள், பேருந்து நிலையம், பூங்கா பரமாரிப்பு, மரக்கன்று நடுதல் ஆகிய பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் இரா.செல்வராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதமாக மேற்கொள்ள செயல் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ச.கண்ணன், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் உ.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.