திருவள்ளூரில் 77-வது சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசியக் கொடி ஏற்றி வைத்து, வெள்ளைப் புறாக்கள், மூவர்ண பலூன்களை வானில் பறக்கவிட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

பதிவு:2023-08-15 12:10:17



திருவள்ளூரில் 77-வது சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசியக் கொடி ஏற்றி வைத்து, வெள்ளைப் புறாக்கள், மூவர்ண பலூன்களை வானில் பறக்கவிட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

திருவள்ளூரில் 77-வது சுதந்திர தின விழா: மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசியக் கொடி ஏற்றி வைத்து, வெள்ளைப் புறாக்கள், மூவர்ண பலூன்களை வானில் பறக்கவிட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

திருவள்ளூர் ஆக 15 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 77- வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் காலை 9.05 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் அணி வகுப்பை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் வானில் மூவர்ண பலூன்களை பறக்க விட்டும், சமாதானப் புறாக்களையும் பறக்க விட்டார்.

இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறையினர், சுகாதார துறையினர், காவல் துறையினருக்கு சான்றிதழ்கள் கொடுத்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் சுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அதே போல் சுதந்திரப் போராட்ட தியாகிகளும் கவுரவிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து தொடர்ந்து மாணவ மாணிவியரின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை - உழவர் நலத்துறை(ம) சகோதரத்துறைகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.10 லட்சத்து 54 ஆயிரத்து 555 மதிப்பில் வேளாண் இடு பொருட்கள் மானியத்தில் 3 பேருக்கும், மாவட்ட மேலாளர் அலுவலகம் தாட்கோ மூலம் 5 பயனாளிகளுக்கு சென்ட்ரிங் பொருட்கள், சுற்றுலா வாகனம், ஷாமியானா பந்தல், அழகு சாதன பொருட்கள் வாங்க ரூ.31 லட்சத்து 10 ஆயிரத்து 564 மதிப்பில் தாட்கோ மானியம் வழங்கப்பட்டது. அதே போல் மீன்வளத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 1 பயனாளிக்கு ரூ. 5லட்சம் மதிப்பீட்டிலும், வேலை வாய்ப்பற்ற 4 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ.1.25 லட்சம் வீதம் 5 லட்சம் மதிப்பீட்டிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 4 ஊராட்சி மற்றும் ஒரு மாநகராட்சிக்கு வங்கி கடனாக 3 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளையும் இருளர் இன மக்கள் 4 பேருக்கு ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 800 மதிப்பில் இலவச வீட்டு மனைப்பட்டாவும் 29 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 59 லட்சத்து 58 ஆயிரத்து 919 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். 29 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 59 லட்சத்து 58 ஆயிரத்து 919 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

இதில் எஸ்.பி., பா.சிபாஸ் கல்யாண், கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் விஜய் ஆனந்த், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ஜெகதீஷ் சந்திர போஸ், ஊரக வளர்ச்சி துறை திட்ட மாவட்ட அலுவலர் லலிதா சுதாகர், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் வ.ராஜவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.