முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் 1092 பள்ளிகளில் 64 ஆயிரத்து 890 மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

பதிவு:2023-08-26 11:50:34



முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் 1092 பள்ளிகளில் 64 ஆயிரத்து 890 மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் 1092 பள்ளிகளில் 64 ஆயிரத்து 890 மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் ஆக 25 : தமிழ்நாடு சட்டபேரவையில் முதலமைச்சர் அறிவித்தபடி தமிழ்நாட்டில் 1 -ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் , மாணவியர்களுக்கு சிறப்பு திட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை ஊராட்சியில் இன்று துவக்கி தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 1016 தொடக்க பள்ளிகளும், நகராட்சி பகுதிகளில் 49 தொடக்க பள்ளிகளும் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 27 தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஆக மொத்தம் 1092 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படவுள்ளது.

இத்திட்டத்தின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 56 ஆயிரத்து 272 மாணவ மாணவியர்களுக்கும், நகராட்சி பகுதிகளில் 5ஆயிரத்து 567 மாணவ மாணவியர்களுக்கும் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 3 ஆயிரத்து 51 மாணவ மாணவியர்களுக்கும் ஆக மொத்தம் 64 ஆயிரத்து 890 மாணவ மாணவியர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை பள்ளி வேலை நாட்களில் காலை உணவு தயாரித்து வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

திங்கள் கிழமை - உப்புமா வகை - ரவா உப்புமா, காய்கறி சாம்பார்,செவ்வாய் கிழமை- சேமியா காய்கறி கிச்சடி வகை காய்கறி சாம்பார்,புதன் கிழமை -பொங்கல் வகை - வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வியாழன் கிழமை-உப்புமா வகை - அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்,வெள்ளிக் கிழமை - கிச்சடியுடன் இனிப்பு - கோதுமை ரவா காய்கறி கிச்சடி . காய்கறி சாம்பார் வழங்கப்படும்.

காலை உணவு சமைப்பதற்கு பள்ளிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உறுப்பினரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு பள்ளிகளில் உள்ள மாணவ,மாணவியர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் மதிப்பூதியம் வழங்கப்படும்.

மேலும் பள்ளி மையங்களுக்கு ஒரு மாணவருக்கு ரூ. 8.25 வீதம் அரசு எரிவாயு மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு மாணவ மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்யவும், மாணவ மாணவியரின் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் தயிர்க்கவும், மாணவ மாணவியரின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்தவும் இரத்த சோகை குறைப்பாட்டினை நீக்கவும் மாணவ மாணவியரின் வருகையை அதிகரித்து கல்வியில் தக்க வைத்துக் குறைக்கவும் வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைக்கவும், இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.