திருவள்ளூரில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை எம்எல்ஏ., வி.ஜி. இராஜேந்திரன் பங்கேற்று உணவு வழங்கி தொடங்கி வைத்து தரையில் அமர்ந்து சாப்பிட்டார் :

பதிவு:2023-08-26 13:55:11



திருவள்ளூரில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை எம்எல்ஏ., வி.ஜி. இராஜேந்திரன் பங்கேற்று உணவு வழங்கி தொடங்கி வைத்து தரையில் அமர்ந்து சாப்பிட்டார் :

திருவள்ளூரில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை எம்எல்ஏ., வி.ஜி. இராஜேந்திரன் பங்கேற்று உணவு வழங்கி தொடங்கி வைத்து தரையில் அமர்ந்து சாப்பிட்டார் :

திருவள்ளூர் ஆக 25 : தமிழ்நாடு சட்டபேரவையில் முதலமைச்சர் அறிவித்தபடி தமிழ்நாட்டில் 1 -ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் , மாணவியர்களுக்கு சிறப்பு திட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை ஊராட்சியில் இன்று துவக்கி தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அதன்படி கடம்பத்தூர் ஒன்றியம் பேரம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் சத்தரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட அவைத் தலைவர் கே.திராவிட பக்தன், நிர்வாகிகள் ஆர்.டி.இ.ஆதிசேஷன், ஒன்றிய செயலாளர் மோ.ரமேஷ், ஒன்றிய குழு துணை தலைவர் சரஸ்வதி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜவஹர்லால், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர் , ஊராட்சி மன்ற தலைவர்கள் பேரம்பாக்கம் ஜெயந்தி சுயம் பிரகாஷ், சத்தரை வசந்தி வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதே போல் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட முகமது அலி தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் நகர் மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், ஆணையர் சுரேந்திரஷா ஆகியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் உணவு வழங்கி தொடங்கி வைத்தனர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் அயூப்அலி, பிரபாகரன் வசந்தி வேலாயுதம், ஸ்ரீனிவாசன், அருணா ஜெய்கிருஷ்ணா, நகராட்சி சுகாதார அலுவலர் ஆர்.கே. கோவிந்தராஜு , குணசேகரன் நடராஜன் உட்பட நகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.