பதிவு:2023-08-26 14:14:43
திருவள்ளூர் மாவட்ட அளவிலான தடகள போட்டி : 750 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு :
திருவள்ளூர் ஆக 26 : திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு தடகள சங்கத்தின் தலைவரும், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை சந்திரசேகர் தலைமை வகித்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று ஒலிம்பிக் தீபம் ஏற்றி போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் 5000,3000, 2000, 200,100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் ஆகிய தடகள போட்டிகளில் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள், விளையாட்டு அகதெமியிலிருந்து வீரர், வீராங்கனைகள் என மொத்தம் 750 க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ் ஆகியவைகளையும் அவர் வழங்கினார். இந்த தடகள போட்டிகளில் தேர்வு செய்யப்படும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாநில அளவில் செப்.15,16,17 ஆகிய நாள்களில் நாமக்கல் மாவட்டம், திருசெங்கோட்டில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்கவும் அழைத்துச் செல்லவும் உள்ளனர்.
இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார், திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு சங்கத்தின் செயலாளர் மோகன்பாபு, காங்கிரஸ் கட்சியின் ஓபிசி அணி பிரிவு செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் அஸ்வின்குமார், ரகுராமன், நகரத் தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினருமான ஜான் உள்ளிடேடோர் கலந்து கொண்டனர்.