திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

பதிவு:2023-08-26 14:17:20



திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூர் ஆக 26 : திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில் முன்பு ஆட்டோக்களுக்கு முறையில்லாமல் ஆன்லைனில் அபராதம் பதிவு செய்வதை கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் கரிமுல்லா தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் எம்.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இதில் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் குப்புசாமி, திருவள்ளூர் முன்னாள் நகர் மன்ற தலைவர் பி.சுந்தரராஜன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் தொடங்கி வைத்து கண்டன உரை நிகழ்த்தினர்.

அப்போது, மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது, மாவட்ட முழுவதும் உள்ள ஆட்டோக்களுக்கு முறையில்லாமல் ஆன்லைனில் அபராதம் பதிவு செய்வதை கைவிடவும், திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு அனைத்து ஆட்டோக்களும் வந்து செல்ல அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர். இதில் நிறைவாக திருவள்ளூர் பகுதி செயலாளர் பி.சரவணன் நன்றி கூறினார்.