ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி "கொஞ்சம் கவிதை, கொஞ்சம் கதை, கொஞ்சம் நாம்" என்ற தலைப்பில் சிறப்புரை :

பதிவு:2023-08-26 14:19:05



ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி "கொஞ்சம் கவிதை, கொஞ்சம் கதை, கொஞ்சம் நாம்" என்ற தலைப்பில் சிறப்புரை :

ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி

திருவள்ளூர் ஆக 26 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ் இணைய கல்விக் கழகம் இணைந்து நடத்திய மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி "கொஞ்சம் கவிதை, கொஞ்சம் கதை, கொஞ்சம் நாம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட் லத்ஸ் மாபெரும் தமிழ் கனவு என்ற பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் கருத்துரையும் வழங்கி கல்லூரி மாணவி கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கினார்.

தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியினை தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 கல்லூரிகளை சேர்ந்த ஏறத்தாழ ஒரு லட்சம் மாணவர்களை சென்றடையும் வண்ணம் 100 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன.

அடுத்த கட்ட நிகழ்ச்சியானது 2023 ஜூலை மாதம் தொடங்கியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 200 கல்லூரிகளில் மாபெரும் தமிழ் கனவு பரப்புரை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குறைந்தபட்சம் 1.5 லட்சம் மாணவர்களை சென்றடைவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் 50க்கும் மேற்பட்ட ஆளுமைகளை கொண்டு 200 சொற்பொழிவாளர்களை கொண்டு இந்நிகழ்ச்சிகளை நடத்தி முடிக்க செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தக கண்காட்சி, நான் முதல்வன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வங்கி கடன் உதவி ஆலோசனை, சுய உதவி குழுவின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் இந்நிகழ்ச்சிகள் நடைபெறும் கல்லூரிகளில் அமைக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி தமிழ் பெருமிதம் ஆகிய இரு கையேடுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 800 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து தமிழ் பெருமிதம் சிற்றேற்றிலுள்ள துணுக்குகளை வாசித்து சிறப்பாக விளக்கம் அளித்த மாணவ மாணவியர்களுக்கு பெருமிதச் செல்வி, பெருமிதச் செல்வன் என்ற பட்டங்களையும் சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பிய மாணவ-மாணவியர்களுக்கு கேள்வியின் நாயகி, கேள்வியின் நாயகன் என்ற பட்டங்களையும் சூட்டிச் சான்றிதழ்களையும் பரிசுகளையும் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட் லத்ஸ் மற்றும் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி ஆகியோர் வழங்கினர்.இதில் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ரூபேஷ், வெல்டெக் பல்கலைக்கழக துணைவேந்தர் சாலிவாகனன், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.