பூண்டி வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் ஆசிரியர் தின விழா

பதிவு:2023-09-10 21:29:55



பூண்டி வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் ஆசிரியர் தின விழா

பூண்டி வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் ஆசிரியர் தின விழா

திருவள்ளூர் செப் 09 : பூண்டி வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் இணைந்து ஒன்றியத்தில் உள்ள 105 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை இணைத்து சிறுவானூரில் உள்ள சாய் மஹாலில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. நெல்வாய் அரசு நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் மணி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலர் ஆனி பெர்டீஷீயா பொற்கொடி தலைமை தாங்கி ஆசிரியர்களின் சேவை குறித்து பேசினார். அதனைத் தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் கோ. பூவராக மூர்த்தி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதன் தேவை குறித்து எடுத்துரைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ( தொடக்கக்கல்வி ) ம.மோகனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்களின் பெருமை குறித்து சிறப்புரையாற்றி அனைத்து பள்ளிகளுக்கும் நினைவுப்பரிசு கேடயம் வழங்கினார்.

பின்னர் சமுதாயத்தில் ஆசிரியரின் பங்களிப்பு அதிகம் தற்காலத்திலே முற்காலத்திலே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது.இதில் 8 ஆசிரியர்கள் இரு அணிகளில் கலந்து கொண்டு தமது வாதங்களை முன் வைத்தனர். பட்டிமன்ற நடுவராக பா.கில்டா தனது தீர்ப்பில் ஆசிரியர் பங்களிப்பு எல்லா காலத்திலும் மிகுந்து காணப்படுகிறது என தீர்ப்பளித்தார்.

தொடர்ந்து, ஐ ஆர் சிடி எஸ் தொண்டு நிறுவன இயக்குநர் பி. ஸ்டீபன் கேக் வெட்டுதல் நிகழ்வை துவக்கி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்து அட்டைகள் வழங்கி கௌரவித்தார். இறுதியில் போந்தவாக்கம் அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் காமாட்சி நன்றி கூறினார்.