திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

பதிவு:2023-09-10 21:33:59



திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

திருவள்ளூர் செப் 09 : திருவள்ளூர் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, பிறப்பு முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்விதிட்டத்தின் 15.09.2023 முதல் 20.10.2023 வரை மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஒன்றியம் வாரியாக நடைபெறவுள்ளது.

அதன்படி 15.09.2023 அன்று திருவள்ளூர் ஒன்றியத்தில் வேப்பம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை 9.30 முதல் மாலை 1 மணி வரையும், 16.09.2023 அன்று திருத்தணி ஒன்றியத்தில் திருத்தணி அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் காலை 9.30 முதல் மாலை 1 மணி வரையும், 19.09.2023 அன்று மீஞ்சூர் ஒன்றியத்தில் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 முதல்மாலை 1 மணிவரையும்,21.09.2023 அன்று சோழவரம் ஒன்றியத்தில் சோழவரம் அரசு ஆண்கள்மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 முதல் மாலை 1 மணி வரையும், 26.09.2023 அன்று ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் ஆர் கேபேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 முதல்மாலை 1 மணி வரையும்.

05.10.2023 அன்று புழல் ஒன்றியத்தில் புழல் பொப்பிலிராஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 முதல் மாலை 1 மணி வரையும், 06.10.2023 அன்று பூண்டி ஒன்றியத்தில் பூண்டி அரசுமேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 முதல்மாலை 1 மணி வரையும்,07.10.2023 அன்று கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் கும்மிடிபூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 முதல் மாலை 1 மணி வரையும், 10.10.2023 அன்று கடம்பத்தூர் ஒன்றியத்தில் கடம்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 முதல் மாலை 1 மணி வரையும், 12.10.2023 அன்று வில்லிவாக்கம் ஒன்றியத்தில் அம்பத்தூர் பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 முதல்மாலை 1 மணி வரையும்.

13.10.2023 அன்று எல்லாபுரம் ஒன்றியத்தில் பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 முதல் மாலை 1.00 மணி வரையும்,17.10.2023 அன்று பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், வட்டார வளமையத்தில் காலை 9.30 முதல் மாலை 1 மணி வரையும்,19.10.2023 அன்று திருவாலங்காடு ஒன்றியத்தில் திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 முதல் மாலை 1 மணிவரையும்,20.10.2023 அன்று பூந்தமல்லி ஒன்றியத்தில் பூந்தமல்லி சரோஜினிவரதப்பன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 முதல் மாலை 1 மணிவரை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்கள் ஒன்றியம் வாரியாக நடைபெறவுள்ளது.

இம்மருத்துவ முகாமில் சார்ந்த ஒன்றியங்களில் உள்ள மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளில் தேசிய அடையாள அட்டை, அறுவை சிசிச்சை மற்றும் உதவி உபகரணம் தேவையுள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இம்முகாமிற்கு வரும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் 4 புகைப்படம், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகலுடன் வர வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.