பொன்னேரி அருகே இறந்த கணவரின் பெயரை நீக்குவதற்கு பதிலாக மனைவியின் பெயரை ஸ்மார்ட் கார்டில் இருந்து நீக்கம் : ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமலும் அவதி : ஆட்சியர் அலுவலகத்தில் பெண் கோரிக்கை

பதிவு:2023-09-20 21:24:32

திருவள்ளூர் செப் 21 : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்காவிற்குட்பட்ட செங்கழுநீர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (33) . இவரது கணவர் செங்கேணி. அனிதாவின் கணவர் செங்கேணி கடந்த 5.2.2022 -ல் உடல் நலக் கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் கணவர் செங்கேணி இறந்ததற்கான இறப்பு சான்றிதழை வாங்கி பொன்னேரி வட்ட வழங்கல் அதிகாரியிடம் கொடுத்த நிலையில் இறந்த கணவர் பெயரை நீக்குவதற்கு பதிலாக உயிரோடு இருக்கும் அனிதாவின் பெயரை நீக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரேஷன் கடையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க சென்ற போது, ஸ்மார்ட கார்டில் உனது பெயர் நீக்கப்பட்டிருப்பதாகவும், உனது கணவர் செங்கேனி பெயர் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அனிதா செய்வதறியாது தவித்தார். இதனையடுத்து பொன்னேரி வட்ட வழங்கல் அதிகாரி , வட்டாட்சியர் என அனைத்து அதிகாரிகளிடம் முறையிட்டும் கடந்த 6 மாதங்களாக இதற்கு விடிவு பிறக்கவில்லை. இந்நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று பார்க்குமாறு அதிகாரிகள் கூறியதையடுத்து கணவனை இழந்த பெண் அனிதா மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனுவை அளித்தார்.

இறந்த எனது கணவர் பெயரை நீக்காமல், உயிரோடு இருக்கும் எனது பெயரை நீக்கியிருப்பது வேதனை அளிப்பதாகவும், படித்த அதிகாரிகளே இது போன்ற தவறுகளில் ஈடுபடுவதால் படிக்காத ஏழை எளிய மக்களின் நிலை என்னவென்றே தெரியவில்லை என்றும் ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவித்தார். மேலும், தற்போது மகளிர் உரிமைத் திட்டம் மூலம் ஆயிரம் ரூபாய் பெறுவதற்காக விண்ணப்பிக்கவும் முடியாமல் திணறுவதாகவும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.