சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் புதுமைப்பெண் திட்டத்தில் பயனாளிகளின் சேர்க்கைக்கான வலைதளம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

பதிவு:2023-09-21 19:52:20

திருவள்ளூர் செப் 21 : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் புதுமைப்பெண் திட்டத்தில், 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கு பயனாளிகளின் சேர்க்கைக்கான வலைதளமானது (www.pudhumaipenn.tn.gov.in) 04.09.2023 அன்று திறக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், இளங்கலை பட்டப் படிப்பு,பட்டய படிப்பு,தொழிற்கல்வி, மருத்துவக்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வீதம் அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.

மேற்படி திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடைய மாணவிகள் தாங்கள் பயிலும் கல்லூரியில், இத்திட்டத்திற்கான பொறுப்பு அலுவலரை அணுகி கல்லூரி மூலம் www.pudhumaipenn.tn.gov.in வலைதளத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.