திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ சுவாமி திருக்கோவில் பிரமோத்ஸவ திருத்தேர் புறப்பாடு முன்னேற்பாட்டு பணிகள் : மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோர் நேரில் ஆய்வு

பதிவு:2022-05-10 22:54:32



திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ சுவாமி திருக்கோவில் பிரமோத்ஸவ திருத்தேர் புறப்பாடு முன்னேற்பாட்டு பணிகள் : மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோர் நேரில் ஆய்வு

திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ சுவாமி திருக்கோவில் பிரமோத்ஸவ திருத்தேர் புறப்பாடு முன்னேற்பாட்டு பணிகள் : மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோர் நேரில் ஆய்வு

திருவள்ளூர் மே 10 : திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ சுவாமி திருக்கோவில் பிரமோத்ஸவ திருத்தேர் புறப்பாடு நிகழ்ச்சி வருகிற 12.05.2022 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் மாவட்ட எஸ்.பி.வீ.வருண் குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் பேசியதாவது :

ஸ்ரீ வீரராகவ சுவாமி திருக்கோயில் பிரமோத்ஸவ திருத்தேர் புறப்பாடு நிகழ்ச்சி எதிர்வரும் 12.05.2022 அன்று காலை 7.30 மணியளவில் தொடங்கி 4 மாடவீதிகள் வழியாக சுற்றி தொடங்கிய இடத்திலேயே திரும்பி வரும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வருவாய்த்துறை, கோவில் நிர்வாகம், காவல்துறை மற்றும் அனைத்து துறைகளையும் இணைத்து ஏற்கனவே முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடத்தப்பட்டு, இந்த தேர் புறப்பட்டு 4 மாட வீதிகளை சுற்றி திரும்பி வரக்கூடிய வழியில் இருக்கின்ற ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காகவும், அங்குள்ள சாலைகளை ஆய்வு செய்தும், ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இன்றைய தினம் இந்த தேர் புறப்பாடு நிகழ்ச்சி சுமுகமாக நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளையும், பொதுமக்களுக்கும், பார்வையாளர்களுக்கும் தேர் புறப்பாடு பார்ப்பதற்கு பல்வேறு இடங்களிலிருந்து வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையின்றி சுமுகமாக இந்த தேர் புறப்பாடு நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், ஒரு சில இடங்களில் தேர் செல்வதற்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் மற்றும் சாலையின் அகலம் குறைவாக இருக்கிறது. அந்த இடங்களில் எந்தவிதமான பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்துவதற்காக பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளார்கள். அதற்கு விரைவில் தீர்வு காணப்படும். அதுமட்டுமின்றி, தேர் செல்லக்கூடிய 4 மாட வீதிகளையும், சாலையை சரியாக மேம்படுத்துவது குறித்தும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இந்த கோரிக்கைகள் அடிப்படையில் சரிசெய்யப்படும். அதுமட்டுமின்றி, பொதுப்பணித்துறை சார்பாக பட்டரைபெரும்புதூர் கொசஸ்தலையாற்றிலிருந்து ஸ்ரீ வீர ராகவ சுவாமி திருக்கோயில் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று, முடிக்கப்பட்டுள்ளது. அந்த வழியில் கூட தேர் செல்ல இருப்பதால், அந்த சாலையையும் சரிசெய்யப்பட்டு, இந்த திருத்தேர் நிகழ்ச்சி சுமுகமாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொதுப்பணித்திலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் ஜே.சேகர், ஸ்ரீ வீர ராகவ திருக்கோவில் கௌரவ ஏஜென்ட் பி.சி.சம்பத், திருவள்ளூர் வட்டாட்சியர் ஏ.செந்தில் குமார், ஸ்ரீ வீர ராகவ திருக்கோவில் மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.சம்பத் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.