திருத்தணியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 619 நபர்களுக்கு பணி ஆணைகள் : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

பதிவு:2023-09-25 20:15:38



திருத்தணியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 619 நபர்களுக்கு பணி ஆணைகள் : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

திருத்தணியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 619 நபர்களுக்கு பணி ஆணைகள் : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

திருவள்ளூர் செப் 24 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, ஜி.ஆர்.டி. பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.முகாமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முகாமில் 121 நிறுவனங்கள் பங்கு பெற்று தங்கள் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான நபர்களை தேர்வு செய்யும் பொருட்டு நடத்தப்பட்ட பல்வேறு தேர்வு முறைகளில் தேர்ச்சி பெற்று ஆண்கள் 456 அவர்களும் பெண்கள் 159 நபர்களும் மாற்றுத்திறனாளிகள் 4 நபர்கள் என தேர்வுசெய்யப்பட்ட 619 நபர்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பணி ஆணைகளை வழங்கி, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் முன்னாள் அமைச்சரும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர்.எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் முன்னிலையில் வாழ்த்து தெரிவித்து பேசினார்.

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் வேலை நாடுநர்களை பதிவு செய்தல், அப்பதிவுதாரர்களை பல்வேறு அரசு துறை மற்றும் தனியார் துறை பணியிடங்களுக்கு பரிந்துரை செய்தல் மற்றும் வேலை நாடுநர்கள் அரசு பணி வாய்ப்பு பெற ஏதுவாக போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்துதல், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழங்குதல் ஆகியவை வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பணிகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

தனியார் துறையில் பதிவுக்காரர்களை பணியமர்த்தும் நோக்கத்தோடு மாதந்தோறும் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்களும் மற்றும் அவ்வப்போது மாவட்ட அளவில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தனியார் துறையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6027 பேர் தனியார் துறையில் இம்முகாம்கள் மூலம் வேலை பெற்று பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் கூறினார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சந்திரன் (திருத்தணி), வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்),வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநர் தேவேந்திரன், உதவி இயக்குநர் க.விஜயா, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் க.தீபா, உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.