பதிவு:2023-09-25 20:25:10
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மகளிர் அணி செயலாளுருமான பா.வளர்மதி சாமி தரிசனம்
திருவள்ளூர் செப் 24 : புண்ணியம் நிறைந்ததும், பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் அதுவும் முதல் சனிக்கிழமையில் பெருமாளை தரிசிப்பது அவ்வளவு பலன்களை அள்ளி கொடுக்கும் என்பது ஐதீகம். இதனால் வாழ்க்கையில் சகல செளபாக்கியங்களையும் பெற நினைப்பவர்கள் இந்த புரட்டாசி முதல் சனிக்கிழமைபெருமாளை தரிசிப்பார்கள்.
அதன்படி 108 திவ்ய தேசங்களில் முக்கிய வைணவத் தலமாக விளங்கும் திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு காலை ஐந்து மணிக்கு நடை திறக்கப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து வீரராகவப் பெருமாளை தரிசித்து வருகின்றனர். கோவில் பின்புறம் உள்ள முடி காணிக்கை அளிக்கும் இடத்தில் மொட்டை அடித்தும், நெய் தீபம் ஏற்றியும் மற்றும் பெருமாள் பாதங்களில் உப்பை கொட்டி நேர்த்திக் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் முன்னாள் அமைச்சரும் அதிமுக மகளிர் அணி செயலாளருமான பா.வளர்மதி வீரராகவப் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் பேட்டியளிக்க கேட்டபோது பேட்டி எல்லாம் எதுவும் வேண்டாம் எனக்காக காத்திருந்ததற்கு மிக்க நன்றி என தெரிவித்து விட்டுச் சென்றார். கழக மகளிர் அணி செயலாளர் உடன் திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமி, மாவட்ட பேரவை இணை செயலாளர் கே.பி.எம்.எழிலரசன் உள்பட பலர் வந்திருந்தனர்.