பதிவு:2023-09-25 20:27:02
திருவூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மாநில அளவிலான தேனீ வளர்ப்பு பயிற்சி
திருவள்ளூர் செப் 24 : திருவூரில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேசிய தேனீ வாரியம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் மாநில அளவிலான தேனீ வளர்ப்பு பயிற்சி 20.09.2023 லிருந்து 26.09.2023 வரை நடைபெற உள்ளது.
20.09.2023 அன்று இப்பயிற்சியினை காணொளி வாயிலாக தமிழ்நாடு பல்கலைக்கழக வேளாண்மை விரிவாக்க இயக்குனர் பி.பொ. முருகன் துவக்கி வைத்து, வேளாண்மையில் தேனீக்களின் முக்கியத்துவம் மற்றும் தேனின் மருத்துவ மகிமை குறித்து பேசினார்.வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சி பானுமதி அனைவரையும் வரவேற்று, மகரந்த சேர்க்கையில் தேனீக்களின் முக்கியத்துவம் குறித்தும், தேனி வளர்ப்பினை ஒரு தொழிலாகவும் செய்யலாம் என ஊக்கப்படுத்தி பேசினார்.
தொடர்ந்து திருவள்ளூர் வேளாண்மை இணை இயக்குனர் எல். சுரேஷ் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் தேனீ வளர்ப்பின் பங்கு குறித்தும் வேளாண்மை துறையின் கீழ் வழங்கப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.பின்னர் உதவி பேராசிரியர் பூச்சியியல் வி.சு.விஜயசாந்தி, ஏழு நாட்கள் நடக்கவிருக்கும் பயிற்சியின் அட்டவணை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து தோட்டக்கலை துணை இயக்குனர், மாநில தொழில் மைய துணை இயக்குனர் கலந்து கொண்டு துறையின் திட்டங்கள் பற்றி பேசினார்.மேலும் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விஞ்ஞானிகள் பங்கு பெற்று சிறப்புரையாற்றினார்.இப்பயிற்சியில் 30 விவசாயிகள் மற்றும் ஊரக இளைஞர்கள் பங்கு பெற்றனர்.