பதிவு:2023-09-25 20:29:07
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வருகைபுரிந்து 10-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
திருவள்ளூர் செப் 24 : திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வருகைபுரிந்து 10-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பிறவியிலேயே கை,கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமிற்கு பள்ளி தாளாளர் விஷ்ணு சரண், பள்ளி இயக்குனர் பரணிதரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.ஸ்ரீ நிகேதன் பள்ளியின் முதல்வர் டாக்டர். ஸ்டெல்லா ஜோசப், பள்ளித் துணை முதல்வர் கவிதா கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மருத்துவ உதவிகளைப் பெற்றனர் விழாவிற்கு சவிதா மருத்துவ மைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்தனர்.
இம்மருத்துவ முகாமினை ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சமூக நலத் துறை, பெடரல் மறுவாழ்வு மைய நிர்வாக மேலாளர் இலட்சுமி, அன்பு சாய் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் "காருண்யா" கார்த்திக், சேவா ரத்னா டாக்டர்.ஜெயவேல் ஆகியோர் ஒருவார காலமாக முகாமை முயற்சி செய்து சிறப்பாக நடத்திக் காட்டினர்.
மருத்துவ முகாமில் 2023-ஆம் கல்வி ஆண்டிற்கான டாக்டர். இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற ஸ்ரீ நிகேதன் பள்ளியின் முதன்மைத் தமிழ் ஆசிரியர் திருக்குறள் செம்மல்.க.செந்தில் குமாருக்கு, மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பாக நினைவுப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.இறுதியில் தலைமை ஆசிரியர்கள் ஷாலினி, சுஜாதா ஆகியோர் நன்றி கூறினர்.