திருவள்ளூர் பெரிய குப்பத்தில் நள்ளிரவில் வீட்டில் திருட முயன்ற 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது

பதிவு:2023-09-25 20:32:42



திருவள்ளூர் பெரிய குப்பத்தில் நள்ளிரவில் வீட்டில் திருட முயன்ற 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது

திருவள்ளூர் பெரிய குப்பத்தில் நள்ளிரவில் வீட்டில் திருட  முயன்ற 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது

திருவள்ளூர் செப் 24 : திருவள்ளூர் டவுன் போலீசார் ரோந்து வாகனம் மூலம் நேற்று முன்தினம் (22-ஆம் தேதி) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பெரியகுப்பம் சோழன் தெருவைச் சேர்ந்த பெண்கள் நள்ளிரவு 1:30 மணியளவில் சாலையில் நின்று கொண்டு இருப்பதை பார்த்து விசாரித்துள்ளனர். அப்போது ஒரு வீட்டில் ஜன்னல் வழியாக திருட முயன்ற போது பெண் கூச்சலிட்டதால் 3 பேர் தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட போலிசார் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் பெரியகுப்பம் கிராமத்தில் புற்றுக் கோயிலில் மேற்கூரையை உடைத்து உள்ளே இறங்கி உண்டியல் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதையடுத்து கோயில் நிர்வாகி சரவணனுக்கு கொடுத்த தகவலின் பேரில் கோயிலை வந்து பார்த்தபோது உண்டியல் உடைத்து காணிக்கை கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி சரவணன் திருவள்ளூர் டவுன் போலீசில் கொடுத்தார்.இதனையடுத்து பிடிபட்ட மூன்று இளைஞர்களிடம் விசாரித்ததில் அவர்கள் திருவள்ளூர் அடுத்த திருவூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், அதேபோல் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த பெருமாள் மகன் சரவணன் (21) மற்றும் திருத்தணியை சேர்ந்த ஹேமநாதன் மகன் விக்னேஷ் (19) என்பதும் தெரியவந்தது.இதனை அடுத்து 17 வயது சிறுவனை ஜாமினில் விடுவித்தனர். சரவணன் மற்றும் விக்னேஷ் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

அதேபோல் திருவள்ளூர் நகரின் முக்கிய சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் அருகே உள்ள ம.பொ.சி நகர் முதல் தெருவில் ராஜன் மெடிக்கல்ஸ் கடையை ஆனந்தன் (50) என்பவர் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் தனது மெடிக்கல் ஷாப்பை இரவு 10 மணிக்கு மூடி சென்றுள்ளார்.

இந்நிலையில்அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் மெடிக்கல் ஷாப்பை வந்து பார்த்தபோது மெடிக்கல் ஷாப் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு உள்ளே சென்று பார்த்த போது மெடிக்கல் ஷாப்பில் இருந்த ரூபாய் 5 ஆயிரம் பணம் மட்டும் திருடு போயிருப்பதும் மெடிக்கல் ஷாப்பில் முன் பகுதி கண்ணாடிகள் உடைத்திருப்பதும் தெரியவந்தது.இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.