பதிவு:2023-09-25 20:40:29
இரண்டறை ஆண்டு கால திமுக ஆட்சியில் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த திமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா பேச்சு :
திருவள்ளூர் செப் 25 : திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருவள்ளூர் நகர அதிமுக சார்பில் வருகிற நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கழக வெற்றி குறித்தும் பூத் கமிட்டி அமைப்பதற்கான செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் நகர் மன்ற உறுப்பினருமான ஜி கந்தசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான பி.வி. ரமணா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா, திருவள்ளூர் திருத்தணி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதியிலும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்த்து இருப்பதாக தெரிவித்தார். இந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை தலைமை கழகத்திலிருந்து நேரடியாக வந்து ஆய்வு செய்து எவ்வாறு கட்டமைத்து இருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்வார்கள் என தெரிவித்தார். மேலும் வருகிற நாடாளுமன்றத் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் அனைவருக்கும் கட்சியில் நல்ல பதவி உங்களை தேடி வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வருகிற ஐந்தாம் தேதிக்குள் பூத் கமிட்டி அமைக்க அமைப்பதற்கான பணிகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தொகுதி அதிக வாக்கு வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தவர் மக்கள் விரோத திமுக அரசு எந்த பணிகளையும் செய்யாமல் அதிமுக கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறுத்தியதால் இந்த ஆட்சி மீது பொதுமக்கள் கடும் வெறுப்பில் இருப்பதாகவும், திமுக ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் கோடிக்கணக்கான ரூபாயை கொள்ளையடித்ததால் வரும் தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர்கள் வி.ஆர். ராம்குமார் உதயகுமார், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் கேபிஎம் எழிலரசன், நகர அவைத் தலைவர் ராதாகிருஷ்ணன்,இணைச் செயலாளர் நாகம்மாள் சேகர், மாவட்ட பிரதிநிதிகள் ரவி, வெங்கடேசன், நகர மன்ற உறுப்பினர் சித்ரா விஸ்வநாதன் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.